நல்லா உற்று பாருங்க, நான்தான் அரவிந்த் கேஜ்ரிவால்..! போலீசாரை குழப்பிய பிக்பாக்கெட் திருடன்
டெல்லி: பிக்பாக்கெட் அடித்த போது கையும் களவுமாக பிடிபட்ட திருடன் தன்னை அரவிந்த் கேஜ்ரிவால் என்று கூறி, போலீசாரை மிரட்டிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி ஆனந்த் விகார் பகுதியிலுள்ள பஸ் டெப்போவில் நடுத்தர வயதுள்ள ஒரு நபர் பயணிகளிடம் நைசாக பிக்பாக்கெட் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த ஒரு பயணி அந்த திருடனை மடக்கி பிடித்து, பிற பயணிகள் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பார்த்தபோது, பிக்பாக்கெட் திருடன் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை போன்ற உருவ ஒற்றுமையுடன் இருப்பதை பார்த்து வியந்தனர்.

இதை சாதகமாக்கிக் கொண்ட திருடன், தன்னை அரவிந்த் கேஜ்ரிவால் என்று சாதித்தார். சாமானிய வாழ்க்கையை வாழும் நோக்கிலேயே பஸ்களில் பயணிப்பதாகவும், எனவேதான் பஸ் நிலையம் வந்ததாகவும் கூறியதை கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் குழம்பி போயினர். இருப்பினும் அடையாள அட்டை உள்ளிட்ட பிற விவரங்களை தருமாறு போலீசார் கேட்டபோது, அந்த நபர் திருதிருவென விழிக்க தொடங்கினார்.
இதையடுத்து போலீசார் பிக்பாக்கெட் திருடனை கைது செய்தனர். ஆனால், தன்னை கைது செய்தால் அதிகாரத்தை பயன்படுத்தி உங்களை சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று அந்த நபர் போலீசாரை பார்த்து மிரட்டியுள்ளார். கோபமடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய வகைகளில் விசாரித்ததில், திருடனின் பெயர் அரவிந்த் ஷர்மா என்பதும், வடகிழக்கு டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications