டீச்சர் மகளை பலாத்காரம் செய்த வீடியோவை டீச்சருக்கே அனுப்பிய மாணவன்
பெங்களூரு: டியூசன் படித்த ஆசிரியையின் மகளை பலாத்காரம் செய்து அந்த சிடியை ஆசிரியையிடமே கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மாகடி ரோடு பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் மகேஷ். இவர் பிளஸ் டூ படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற ஆசிரியை வீட்டுக்கு சென்று டியூசன் படித்தார். அப்போது மல்லிகாவின் மகள் நந்தினி மீது மகேஷுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதை வெளிக்காடிக்கொள்ளவில்லை.

இயல்பான பேச்சு
நந்தினி தற்போது பிசினஸ் நிர்வாகத்தின் முதுநிலை படித்து வருகிறார். எம்.என்.சி வங்கி ஒன்றிலும் பணி புரிகிறார். அதே நேரம் மகேஷ், பழைய பழக்கத்தை வைத்துக் கொண்டு மல்லிகாவின் வீட்டுக்கு அவ்வப்போது செல்வது வழக்கமாம். அப்போதெல்லாம் நந்தினியிடமும் பேச்சுக் கொடுப்பார். நந்தினியும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.

பிறந்தநாள் பார்ட்டி
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நந்தினிக்கு போன் செய்த மகேஷ் தனது பிறந்தநாளையொட்டி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் மாகடி ரோட்டிலுள்ள தனது இன்னொரு வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளார். இதை நம்பி நந்தினியும் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் வீட்டில் மகேஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து
இதைப்பார்த்து ஆச்சரியமடைந்த நந்தினி, பிறந்தநாள் பார்ட்டிக்கு இன்னும் யாரும் வரவில்லையா என்று கேட்டுள்ளார். நண்பர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள், அதுவரை ஜூஸ் குடியுங்கள் என்று கூறி நந்தினிக்கு கூல்ட்டிரிங்ஸ் தந்துள்ளார் மகேஷ். அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து போட்டிருந்ததால் சிறிது நேரத்தில் நந்தினி மயக்கமடைந்தார்.

வீடியோவில் பதிவு
இதையடுத்து நந்தினியை மகேஷ் பலாத்காரம் செய்தார். அதை தனது செல்போன் கேமராவில் வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார். மயக்கம் தெளிந்து எழுந்த நந்தினிக்கு நடந்த சம்பவம் தெரியவந்தது. மகேஷிடம் சண்டைபோட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீடியோ எடுத்த விவகாரம் நந்தினிக்கு தெரியவில்லை. மேலும் பிரச்சினைகள் வெடிக்கும் என்ற பயத்தால், நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் நந்தினி கூறவில்லை.

டீச்சருக்கே வீடியோ
இந்நிலையில்தான், மகேஷ் நந்தினியை போனில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியே விட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் நந்தினி மசியவில்லை. திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த மகேஷ் பலாத்கார வீடியோவை சிடியாக்கி, அதை மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிடியை போட்டு பார்த்த மல்லிகா தனது மகளின் நிலையை பார்த்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார். இதையடுத்து நந்தினியிடம் கேட்டு உண்மையை தெரிந்து கொண்ட மல்லிகா போலீசில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் போலீஸ்
பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதால் இது சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மகேஷை கைது செய்துள்ளனர். அவர் தனது நண்பர்கள் சிலருக்கும் வீடியோவை அனுப்பி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நண்பர்களை தேடி வருகின்றனர். மேலும் மகேஷின் செல்போனில் இருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். பி.கு: செய்தியில் வரும் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications