பெங்களூரில் போதை மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் கொடுத்து 14 வயது சிறுமி பலாத்காரம்
பெங்களூர்: பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் சிக்க பானஸ்வாடியில் உள்ள ஏ.கே. காலனியில் வசித்து வருபவர் சோமசேகர் என்ற சோமா(20). கூலி வேலை செய்பவர். அவர் அப்பகுதியில் வசித்து வரும் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை தன் வசப்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சி செய்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமியின் தாய் வீட்டு வேலை செய்து அவரை படிக்க வைக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமியின் தாய் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது சோமா அங்கு சென்று அவருக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சிறுமிக்கு போதை ஏறியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சோமா. இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த தனது தாயிடம் நடந்தவற்றை சிறுமி தெரிவித்தார்.
சிறுமியின் தாய் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சோமாவை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications