ஏடிஎம்மில் பணம் எடுத்த வாலிபரை கத்தியால் குத்திய திருடன்: வீடியோவை பார்த்து உஷாராக இருங்க

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை திருடன் கத்தியால் 4 முறை குத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வாலிபர் ஒருவர் கடந்த 1ம் தேதி பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவர் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருக்கையில் நவீன் பாரிகர் என்ற திருடன் அந்த மையத்திற்குள் நுழைந்தார்.

அவர் பணம் எடுத்துக் கொண்டிருந்த நபரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 4 முறை குத்தினார். இதில் காயம் அடைந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீனை கைது செய்துள்ளனர். தனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக விசாராணையில் நவீன் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம் மையத்தில் நடந்த இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஏடிஎம் மையங்களுக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+