மனைவியின் கள்ளக்காதலனை 20 முறை கத்தியால் குத்தி தொண்டையை கிழித்துக் கொன்ற கணவர்!
மனைவியின் கள்ளக்காதலனை 20 முறை கத்தியால் குத்தி கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி : நிகல் விகார் பகுதியை சேர்ந்த கபீர் என்பவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை வெறி தீர 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
நிகல் விகார் பகுதியைச் சேர்ந்த கபீர் 28 வயது இளைஞர். இவரது மனைவி அங்குள்ள ஷு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவரது மனைவிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த நரேஷ் தாஸ் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கபீரின் மனைவி வீட்டிற்கு வந்தப் பிறகும் நரேஷுடன் போனில் பேசியுள்ளார். இதனை நிறுத்தக் கோரியும் இருவரும் அதனை காதில் வாங்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து இதுதொடர்பான ஆதாரத்தை சேகரிப்பதற்காக கபீர் அவரது மனைவியின் போனில் அவருக்கே தெரியாமல் மெமரி கார்டை போட்டு அழைப்புகளை ரெக்கார்ட் செய்து, மனைவி தூங்கிய பிறகு இரவில் அதனை போட்டு கேட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினரும் கபீர் இல்லாத நேரத்தில் நரேஷ் வீட்டிற்கு வந்து செல்வதை உறுதி செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கபீர், நரேஷை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக புதிய கத்தி ஒன்றை வாங்கிய அவர், கடந்த 11ஆம் தேதி மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் நரேஷ் இருப்பதைக் கண்ட அவர் மது அருந்த அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் இருவரின் கள்ளக்காதல் தொடர்பான ஆதாரங்களை போட்டுடைத்த கபீர், நரேஷின் தொண்டை, மார்பு, முகம் என 20 இடங்களில் அவரது மூச்சு நிற்கும் வரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நரேஷின் தொண்டை பகுதி முற்றிலும் சிதைந்தது. பின்னர் நரேஷின் உடலை தனது மனைவிக்கு காண்பிப்பதற்காக போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் நரேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார் கபீரின் போனில் இருந்த நரேஷின் புகைப்படம் மற்றும் அவரது மனைவி - நரேஷ் ஆகிய இருவருக்குமான உரையாடல்களை வைத்து கபீரை நேற்று கைது செய்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications