முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய நபர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதீஷ் குமாரை நோக்கி ஒருவர் காலணியை (ஷூ) வீசினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் நிதீஷ் குமார் பங்கேற்றார். இது அவரது சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் திரளாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் திடீரென நிதீஷ் குமாரை நோக்கி ஷூவை வீசினார். அதிர்ஷ்டவசமாக ஷூ அவர் மீது விழாமல் மேடைக்கு முன்பாக விழுந்தது. இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். ஷூ வீச்சை பொருட்படுத்தாமல் நிதீஷ் நிகழ்ச்சியில் முழுமையாகப் பங்கேற்றார்.
ஷூ வீசிய நபரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது பெயர் பி.கே.ராய் என்பதும், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. முதல்வரிடம், தான் அளித்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் மீது ஷூ வீசியதாக அந்த நபர் போலீஸாரிடம் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications