அத்வானியை கைது செய்தவருக்கு தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி கொடுத்த மோடி
அத்வானியை கைது செய்த அதிகாரிக்கு தனி பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கைது செய்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை நேற்று மாற்றிய அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்கள் 4 பேர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டனர். 9 பேர் இணை அமைச்சர்களாகினர்.
இதில் முன்னாள் மத்திய உள்துறை செயலர் ராஜ்குமார் சிங்கும் ஒருவர். மின்சாரம் மற்றும் புதுபிக்கக் கூடிய வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்வானி கைது
1990-ம் ஆண்டு அத்வானி அயோத்தி நோக்கி ரதயாத்திரை நடத்திய போது பீகார் மாநிலம் சாமஸ்திபுர் ஆட்சியராக இருந்தார் ராஜ்குமார் சிங். அப்போது பீகார் முதல்வராக இருந்த லாலுபிரசாத் யாதவ் உத்தரவுப்படி அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து அவரை கைது செய்தவர் ராஜ்குமார் சிங்.

உள்துறை செயலர்
இதே ராஜ்குமார்சிங், 1999-2004 ஆம் ஆண்டில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் கூடுதல் செயலரானார். காங்கிரஸ் ஆட்சியில் 2011-13ல் உள்துறை செயலாளரானார்.

மத்திய அமைச்சர்
ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்த ராஜ்குமார் பீகாரின் அர்ராக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இப்போது ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

அத்வானியை வெறுப்பேற்ற?
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் அத்வானி என்கிற ஆளுமை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளது. அத்வானியை வெறுப்பேற்றத்தான் ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications