மாற்றுத்திறனாளியை நிர்வாணப்படுத்தி விசாரணை: மீண்டும் சர்ச்சையில் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்
டெல்லி: சோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளியான ஆடிட்டர் ஒருவரை நிர்வாணப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர் டெல்லி விமான நிலைய அதிகாரிகள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் தனது காலை இழந்தவர் ராஜேஷ் பாட்டியா என்ற ஆடிட்டர். தனது செயற்கைக் காலுடன் இதுவரை பலமுறை விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ள ராஜேஷுக்கு, சமீபத்திய டெல்லி விமானப் பயணம் மிகவும் கசப்பானதாக அமைந்து விட்டது. அதற்குக் காரணம் டெல்லி விமான நிலைய சோதனை அதிகாரிகள்.
டெல்லி விமான நிலையத்தில் மாற்றுத் திறனாளி என்றும் கூட பார்க்காமல் நிர்வாணப்படுத்தி செக்யூரிட்டி செக் செய்துள்ளனர் அதிகாரிகள். ராஜேஷ் பாட்டியாவின் உடைகளை அகற்றி உட்கார வைத்து விட்டு அவரது செயற்கை காலை எப்படி ஸ்கேன் செய்வது என்று பாதுகாப்பு அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனராம்.
சில மாதங்களுக்கு முன்னர் மாற்றுத் திறனாளி பெண் ஒருவரின் செயற்கைக் காலை கழற்றி சோதனை செய்த போதே, டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கண்டனத்திற்கு ஆளானார்கள்.
பின்னர், இது குறித்து மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தினர் பலரிடம் பேச்சு வார்த்தை நடத்திய விமான நிலைய அதிகாரிகள், ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்' என உறுதிமொழி அளித்தனர்.
ஆனால், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது வேதனை தருவதாக அமைந்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications