திரிபுரா மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார் மாணிக் சாகா.. 2வது முறையாக அரியணை ஏறினார்!
திரிபுரா முதல்வராக மாணிக் சகா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அகர்தலா : திரிபுரா மாநில முதலமைச்சராக மாணிக் சகா இன்று பதவியேற்றுக் கொண்டார். திரிபுராவின் முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்ற நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திரிபுராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

யார் முதல்வர்
கடந்த முறை திரிபுரா முதல்வராக இருந்த மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒரு தரப்பினர் மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக்கை புதிய பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்வருமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் வெளியானது. இதனால், புதிய முதல்வரை தேர்வு செய்வதில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

ஒரு மனதாக தேர்வு
இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர். நேற்று முன்தினம் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாணிக் சஹாவை புதிய முதல்வராக தேர்வு செய்ய ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

2வது முறையாக
இதையடுத்து திரிபுரா ஆளுநர் சத்யதேவ் நாராயணனை சந்தித்த மாணிக் சஹா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். திரிபுராவின் முதல்வர் யார் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில், மீண்டும் மாணிக் சகா தலைமையில் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. திரிபுராவின் முதலமைச்சராக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்றுள்ளார்.

பிரதமர் மோடி
அகர்தலாவில் இன்று நடைபெறும் பிரமாண்ட விழாவில் மாணிக் சாகா திரிபுராவின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications