மாணிக்சந்த் 'குட்கா’ குரூப் தலைவர் ரசிக்லால் தாரிவால் புற்றுநோயால் காலமானார்
குட்கா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் மாணிக்சந்த் நிறுவனத்தின் தலைவர் ரசிக்லால் தாரிவால் (வயது78) புற்றுநோயால் காலமானார்.
புனே: புகையிலைப் பொருட்களான குட்கா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் மாணிக்சந்த் நிறுவனத்தின் தலைவர் ரசிக்லால் தாரிவால் (வயது78) புற்றுநோயால் காலமானார்.
புகையிலை தயாரிப்பு பொருளாக இருந்தாலும் குட்கா உள்ளிட்டவை போதைப் பொருளாகவே கருதப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குட்கா உள்ளிட்ட பொருட்களை மாணிக்சந்த் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்நிறுவனத் தலைவரான ரசிக்லால் தாரிவாலின் தந்தை பீடித் தொழிலை தொடங்கினார். அவரைத் தொடர்ந்து ரசிக்லால் தாரிவால் கைகளுக்கு நிர்வாகம் வந்தது குட்கா, பான்மசலா என சாம்ராஜ்யம் விரிவடைந்தது.
அண்மையில் ரசிக்லால் தாரிவாலை புற்றுநோய் தாக்கியது. இதையடுத்து புனே மருத்துவமனையில் ரசிக்லால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரசிக்லால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
புற்றுநோயை உருவாக்கக் கூடிய புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் தலைவரே புற்றுநோயால் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications