உண்ணாவிரதம்.. இரோம் ஷர்மிளாவை மீண்டும் கைது செய்தது மணிப்பூர் போலீசார்!
இம்பால்: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மீண்டும் உண்ணாவிரதம் இருந்ததால் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளாவை மணிப்பூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
மணிப்பூரில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இதனைக் கண்டித்து கடந்த 2000ஆம் ஆண்டு முதல் மனித உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அவரை கைது செய்த போலீசார் மூக்கு வழியாக திரவ உணவை செலுத்தினர்.
இரோம் ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு போட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப்பட்டார். இந்த வழக்கில் இரோம் ஷர்மிளாவை கடந்த புதன்கிழமையன்று மணிப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் மீண்டும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தார் இரோம் ஷர்மிளா. அத்துடன் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாகவும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரோம் ஷர்மிளா போராட்டம் நடத்திய இடத்துக்கு சென்ற போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி கைது செய்தனர். ஆனாலும் தமது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications