மணிப்பூரில் கூட்டணி கட்சிகளை கழற்றிவிட்ட பாஜக..60 இடங்களிலும் தனித்து போட்டி..வேட்பாளர்கள் அறிவிப்பு
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் தயவு இன்றி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக 60 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கிறது.
மணிப்பூரில் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சி அமைத்தது. அங்கு இருக்கும் நாகா பீப்பிள் ப்ரோண்ட், நேஷனல் பீப்பிள் பார்ட்டி ஆகிய கட்சிகளின் உதவியோடு பாஜக அங்கு ஆட்சி அமைத்தது.

மணிப்பூரில் உள்ள 60 இடங்களில் 31 இடங்களில் வென்றால் ஆட்சி அமைக்க முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் மணிப்பூரில் பாஜக 31 இடங்களை வென்றது.
இருந்தாலும் சரியாக 31 இடங்களை வைத்து ஆட்சி செய்வது ரிஸ்க் என்பதால் நாகா பீப்பிள் ப்ரோண்ட், நேஷனல் பீப்பிள் பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்தது. இந்த நிலையில்தான் இந்த முறை பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
நாகா பீப்பிள் ப்ரோண்ட், நேஷனல் பீப்பிள் பார்ட்டி ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலில் தலா 4 மற்றும் 3 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 12 இடங்களை தனியாக பெற்றது.
இந்த முறை பாஜக அங்கு தனியாக நிற்கிறது. மாறாக காங்கிரஸ் 6 கட்சிகளின் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இடதுசாரிகள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. சிபிஐ, சிபிஎம், ரெவலூஷனிரி சோஷலிஸ்ட் பார்ட்டி, பார்வேர்ட் பிளாக், மத சார்பாற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
பாஜக 60 இடங்களிலும் தனியாக வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதற்கான 60 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. அதன்படி முதல்வர் என் பைரன் சிங் ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 தேதிகள் இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 3ம் தேதி வெளியாகும்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மத்திய அமைச்சர் புபேந்திர யாதவ் தனது பேட்டியில், பாஜக கண்டிப்பாக இந்த முறை பெரும்பான்மை பெறும். 40 இடங்களுக்கும் அதிகமாக வென்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம். மணிப்பூரை மிகவும் அமைதியாக, நன்றாக பாஜக ஆண்டு இருக்கிறது. மணிப்பூரில் பாஜக பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதனால் இந்த முறை நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications