மணிப்பூர் முதற்கட்ட தேர்தலில் 78.03% வாக்குகள் பதிவு.. பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஒருவர் பலி
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இன்று 5 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 38 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. கடந்த 2017 தேர்தலைப் போல இதிலும் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்து வரும் மார்ச் 5ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நிறைவு
அதேநேரம் அங்கு பொதுமக்களின் மனநிலை அரசுக்கு எதிராக உள்ளதாகவும் இதனால் மக்களைக் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறுகிறது. இவை தவிர நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு விகிதம்
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 5 மாவட்டங்களில் 38 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. காங்போக்பியில் அதிகபட்சமாக 82.97% வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து இம்பாலில் 82.19% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு 86% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு
இந்நிலையில் மணிப்பூரில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி வெடித்ததில் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திபைமுக் சட்டமன்றத் தொகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நௌரெம் இபோச்சௌபா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த அந்த காவலரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இம்பால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது

தேர்தல் அதிகாரி
இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் அகர்வால் கூறுகையில், "மணிப்பூரில் 38 தொகுதிகளுக்கு முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மணிப்பூர் காவலர் ஒருவரது சர்வீஸ் ரைஃபிள் எதிர்பாராத விதமாகத் தவறுதலாக வெடித்துச் சிதறியது. இதில் அவர் உயிரிழந்தார். மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது" என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications