மணிப்பூரில் ராணுவத்தினர் மீதான தாக்குதல் பின்னணியில் சீனா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மணிப்பூரில் தனிநாடு கோரும் தீவிரவாதிகளின் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சீனாவின் தொடர்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

மணிப்பூரில் வியாழக்கிழமையன்று ராணுவ வாகனம் மீது 4 தீவிரவாத இயக்கங்கள் கூட்டாக தாக்குதல் நடத்தின. இதில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் நடத்தப்பட்டுள்ள மிகவும் பயங்கரமான தாக்குதல் இது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சீனாவின் தொடர்பு, உளவுத்துறையின் தோல்வி, மியான்மர் தீவிரவாத குழுக்களுடனான தொடர்பு ஆகியவை குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
- ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய அமைப்புகளில் ஒன்று அஸ்ஸாம் தனிநாடு கோரும் உல்ஃபா அமைப்பு.
- இந்த உல்ஃபா பிரிவின் தலைவரான பரேஸ் பரூவா, பல ஆண்டுகளாக சீனாவின் யூனான் மாகாணத்தில்தான் தலைமறைவாக இருந்து வருகிறார்.
- பரேஸ் பரூவாவின் அமைப்புக்கு சீனா தாராளமான ஆயுத உதவிகளை அளித்து வருகிறது.
- இங்கிருந்தே அஸ்ஸாமில் பல தாக்குதல்களை பரேஸ் பரூவா நிகழ்த்தியும் இருக்கிறார்.
- தற்போதைய தாக்குதலிலும் சீனா பின்ன்ணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
- கடந்த 15 நாட்களாக மியான்மர்-இந்தியா எல்லையில் தீவிரவாதிகள் குவிந்து வந்திருந்ததை ரா மற்றும் ஐ.பி. ஆகியவை ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
- ஆனால் ரா, ஐ.பி.-யின் எச்சரிக்கையை ராணுவ உளவு அமைப்புகள் புறக்கணித்துள்ளது.
- அதேபோல் மியான்மரில் காசின் விடுதலை ராணுவத்துக்கும் இத்தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என கருதப்படுகிறது.
- இந்த அமைப்புதான் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறது.
- இந்த மியான்மர் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் மனித நடமாட்டமே இல்லாத வனப்பகுதி இருப்பதால் மியான்மர் அரசும் கண்டுகொள்ளாமலே இருந்து வருகிறது.
- இம்மூன்று கோணங்களில் மணிப்பூர் தாக்குதலை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
More From
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications