ப.சிதம்பரத்திற்கு எதிராக படை திரளும் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள்.. கார்கேவிற்கு கடிதம்
இம்பால்: மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. இந்த பதிவுக்கு எதிராக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கடும் கோபமடைந்துள்ளதோடு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதியதால் தற்போது அந்த பதிவை ப சிதம்பரம் டெலிட் செய்துள்ளார். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் வன்மறை வெடித்து வருகிறது. இதற்கு அங்கும் வசிக்கும் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையேயான மோதல் தான் காரணமாகும்.

2 நாட்களுக்கு முன்பு கூட மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் முதல்வர் பீரன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. தொடர்ந்து வன்முறை எல்லைமீறியதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. செல்போன் சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அமைதியாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் எதுவும் கைக்கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கூட உயர்மட்டஅளவில் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இனி அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தான் மணிப்பூர் விவகாரம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மணிப்பூரில் 5000 ஆயிரம் மத்திய ஆயுதப்படை வீரர்களை குவிப்பதால் எந்த விடையும் கிடைக்கப்போவது இல்லை. இதில் அதிக புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்றால் பிரச்சனைக்கு காரணம் எனக்கூறி முதல்வர் பீரன் சிங்கை அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அதன்பிறகு இன்னொரு புரிதல் கொண்டிருக்க வேண்டும். அதாவது குக்கி, மைத்தேயி, நாகா உள்ளிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் ஒரே மாநிலத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கான பிராந்திய சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் பிரதமர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மணிப்பூருக்கு செல்ல வேண்டும். அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து பணிவுடன் பேச வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
ப சிதம்பரத்தின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது. அதாவது குக்கி, மைத்தேயி, நாகா இன மக்களுக்கான பிராந்திய சுயாட்சி வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் தான் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள், மணிப்பூர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் உள்பட 10 காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரத்துக்கு எதிராக கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ‛‛ஏற்கனவே மாநிலத்தில் குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் தனியாக சுயாட்சி செய்யும் பிராந்தியம் கேட்டு வரும் நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில் ப சிதம்பரம் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக நாங்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி ப சிதம்பரத்தின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம்.
மணிப்பூரில் வன்முறையான சூழல் நிலவி வரும் சூழலில் இந்த பதிவு கூடுதல் பதற்றத்தை தூண்டும். அதோடு மாநிலத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கும். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக எப்போதுமே துணை நின்று வருகிறது. ப சிதம்பரத்தின் இந்த பதிவு அதற்கு எதிரானதாக உள்ளது. இதனால் அந்த பதிவை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவை ப சிதம்பரம் வெளியிட்ட உடனேயே மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் மேகசந்திரா கமெண்ட் செய்திருந்தார். அதில், ‛‛தயவு செய்து டெலிட் செய்யுங்கள். ஏனென்றால் மணிப்பூர் மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. அதோடு இது சென்சிட்டவான விஷயமாகும்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து ப சிதம்பரம் தற்போது அந்த பதிவை டெலிட் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மணிப்பூர் மாநில முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபு சிங்கும் கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது முற்றிலும் அவரது (ப சிதம்பரம்) சொந்த கருத்தாகும். அவரது பதிவை பார்த்தவுடனேயே நாங்கள் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தெரிவித்தோம். அவர் அனைத்து மூத்த தலைவர்களிடமும் பேசினார்.
நானும் தனிப்பட்ட முறையில் மல்லிகார்ஜூன கார்கேவிடம் பேசினேன். இந்த பதிவு என்பது ப சிதம்பரத்தின் தனிப்பட்ட பார்வையாக இருக்கும். அதேவேளையில் மணிப்பூர் பற்றிய அவரது தவறான புரிதலாகவும் இது இருக்கும். உடனே மல்லிகார்ஜூன கார்கே அவரிடம் போன் செய்து பேசினார். தற்போது அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூருக்கு எதிராக இதுபோன்ற கருத்தை தெரிவிக்க வேண்டாம் என்று ஏற்கனவே நாங்கள் காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டோம். அதேபோல் அவரிடமும் (ப சிதம்பரம்) பேச உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் ப சிதம்பரத்தை மணிப்பூர் முதல்வர் பீரன் சிங்கும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛கடந்த 2008 ம் ஆண்டில் ஜோமி புரட்சி படை உடனான இடைநிறுத்த ஒப்பந்தம் தான் தான் இந்த வன்முறைக்கு காரணம். அதன்மூலம் வன்முறைக்கு விதை போட்டதே ப சிதம்பரம் தான்'' என்று விளாசியுள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications