இங்கிலாந்து காதலரை மணக்கிறார் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா!
அரசியலில் தோல்வியை கண்ட இரோம் சர்மிளா,தனது நீண்ட நாள் காதலரை மணம் முடிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
குவஹாத்தி:தனது நீண்டநாள் காதலரை மணக்கிறார் மணிப்பூர் நாட்டின் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. தேர்தலில் படுதோல்வியை கண்டபிறகு நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது,குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பிடலாம் என்று இரோம் முடிவெடுத்து,திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.
மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி,தொடர்ந்து 17 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி இரும்பு பெண்மணி என பெயர் பெற்றவர் இரோம் சர்மிளா. 45 வயதைக் கடந்துள்ள இரோம் அண்மையில்தான் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.மேலும் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

தனது இளமையை உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தி,நாட்டுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்த இரோம் சர்மிளாவுக்கு தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுக்கள் வெறும் 90 தான்.இதில் மிகவும் சோர்ந்து போனார் இரோம் சர்மிளா.
இந்த நிலையில் இரோம் சர்மிளா கடந்த 8 ஆண்டுகளாக, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மேண்ட் கவுடின்கோ என்பவரை காதலித்து வந்துள்ளார். அவரைத் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் இரோம். இதற்காக இங்கிலாந்து செல்வதற்காக சமீபத்தில் பாஸ்போட்டுக்கு விண்ணப்பமும் செய்துள்ளார் அவர்.அதில் தாமதம் ஆவதால் திருமண விழாவைக் கேரளாவில் வைத்துள்ளார் இரோம்.
கேரளாவில் தனது திருமணத்தை நடத்த இரோம் முடிவு செய்துள்ளார். விரைவில் டெஸ்மேண்ட், இந்தியா வந்ததும் திருமணம் நடக்க உள்ளது.திருமணத்திற்குப் பிறகும் இரோம் தனது, ஆயுத எதிர்ப்புப் போராட்டம் என்றும் கூறிவருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications