மணிப்பூர்:தமிழர்கள் வாழும் மோரேவில் பெரும் இன மோதல்-வீடுகள் தீக்கிரை- பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு!

Subscribe to Oneindia Tamil

மோரே: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதலில் பல வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதனால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Moreh1

மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே பெரும் மோதல் வெடித்தது. மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி போராடுவதால் மோதல் வெடித்தது. ம்ணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த மோதல் வெடித்தது. மோரே நகரிலும் புதன்கிழமை இரவு இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

Morehtamils

மோரே நகரில் பல வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மோரே நகரில் பதற்றம் நிலவுவதால் அங்கு தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. . இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இனத்தவர் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மோரேவில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் பாதிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+