Manipur Lok Sabha Election Results Live : வன்முறை நடந்த மணிப்பூர்.. 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி
மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தின் 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், இரண்டிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
நாட்டில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், 2 தொகுதிகளை கொண்ட மணிப்பூரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் சில பகுதிகள் வன்மறை பாதிக்கப்பட்டதால், பின்னர் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இன்னர் மணிப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கே.கே.ரஞ்சன் 2,63,632 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு பின் காங்கிரஸ் கட்சியின் ஓ.நபாகிஷோர் சிங் 2,45,877 வாக்குகளை பெற்று 17 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பாக பேராசிரியர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம், பாஜக சார்பாக தெளனோஜம் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
அவுட்டர் மணிப்பூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் என்பிஎப் வேட்பாளர் Lorho S. Pfoze 3,63,527 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். 2வது இடத்தில் வந்த பாஜகவின் சோக் பாவோ மாதே 2,89.745 வாக்குகள் பெற்றார். இம்முறை காங்கிரஸ் கட்சி சார்பாக ஆல்பிரட் கங்கம் எஸ்.ஆர்தர் மற்றும் என்பிஎப் சார்பாக கச்சுய் திமோதி ஜிமிக் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கூடியுள்ளதால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தற்போது 10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், என்பிஎஃப் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இருந்தன. தற்போது 11 மணி நிலவரப்படி 2 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது.
இறுதியாக இன்னர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாம் 3,74,017 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். பாஜக வேட்பாளர் தெளனோஜம் பசந்த குமார் சிங் 2,64,216 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதேபோல் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆல்பிரட் கங்கம் எஸ்.ஆர்தர் 3,84,954 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications