நிர்வாணமாக்கிய கும்பலிடம் ஒப்படைத்ததே போலீசாம்.. அண்ணனின் நண்பன் செய்த கொடூரம்! மணிப்பூர் பெண் பகீர்
மணிப்பூர்: நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூர கும்பலில் தன்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்ததாகவும், போலீசார்தான் தங்கள் மக்களை மெய்தி சமூகத்தினரிடம் காட்டிக்கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
உலகையை உலுக்கும் வகையில் மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவர்களின் சகோதரர் உட்பட 2 ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து ஒருவரை கைது செய்து உள்ளது மணிப்பூர் மாநில காவல்துறை. அந்த வீடியோவில் முதல் வரிசையில் பெண்ணை இழுத்து சென்ற பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு 32 வயது இளைஞர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தியை கைது செய்து உள்ளதாக அம்மாநில போலீஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அதில், பேசிய அவர், "அந்த கும்பலிடம் எங்களை ஒப்படைத்ததே காவல்துறைதான். எங்கள் கிராமம் மீது தாக்குதல் நடத்திய கும்பலுடன் போலீசாரும் இருந்தனர்.
எங்களை வீட்டுக்கு அருகிலிருந்து அழைத்து சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் கடந்து அந்த கும்பலுடன் சாலையில் விட்டுச் சென்றதே போலீஸ். அந்த வீடியோவில் இருந்த 2 பெண்களில் இளம் வயது பெண்ணின் தந்தை மற்றும் அவரது இளைய சகோதரரையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கிறது.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இருப்பது கூட எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ தெரியாது. அந்த கும்பலில் என்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்தான். அவர் உட்பட ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காட்ட முடியும். மற்றவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது." என்றார்.
இதில் ஜாதி வெறியால் நண்பனின் சகோதரி என்று கூட பார்க்காமல் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையே உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்ட பழங்குடி மக்களை கொலைகார கும்பலிடம் ஒப்படைத்து இந்த செயலுக்கு துணைபோய் இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
-
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications