ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சிச் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை ரஜினிகாந்திடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக மற்றும் தேசிய அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nainar Nagendran Meets Rajinikanth Presents Book on PM Modi s 12-Year Achievements

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்றுள்ளார். இத்தகைய சூழலில்தான் நடிகர் ரஜினிகாந்த் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினிகாந்தை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சாதனையை விளக்கும் புத்தகத்தை ரஜினியிடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த மேனனும் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளார். தற்போது "வி தி லீடர்ஸ்" என்ற இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் ஆன்லைன் வழியாக சுமார் 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அண்ணாமலை தனி இயக்கம் ஆரம்பித்துள்ள நிலையில், அவரது இயக்கத்தில் ரஜினி ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதேபோல, அண்மையில் ராகவா லாரன்ஸும் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் ஆசிர்வாதத்துடன் இந்த இயக்கத்தில் இணைவதாக ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார். தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பரபரப்பு திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+