மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங்
இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும் நேரில் சந்தித்து பேசியது. மணிப்பூரின் நிலைமைகளை இக்குழுவினர் உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவையும் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒட்டுமொத்த தேசத்துக்கு பேராபத்தாக முடியும் என எச்சரித்தனர்.
மணிப்பூர் ஆளுநருடனான சந்திப்பு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: "இந்தியா" கூட்டணியின் 21 எம்.பி.க்களும் ஆளுநரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். எங்களுடனான உரையாடலின் போது ஆளுநரும் தமது வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொண்டார். 2 நாட்கள் மணிப்பூரில் நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டறிந்தவற்றையும் ஆளுநரிடம் விவரித்தோம். நாங்கள் சொன்ன நிலவரங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்து தரப்பும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்தையும் ஆளுநர் முன்வைத்தார்.

மேலும் மணிப்பூர் மாநிலத்துக்கு அனைத்து கட்சிகள் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்ப நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் பரிந்துரைத்தோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவோம் எனவும் கூறினோம். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
மணிப்பூரில் வன்முறைகளில் ஈடுபடும் ஆயுத குழுக்களுக்கு மியான்மர் வழியாக சீனா ஆயுதம் தருகிறது என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இக்கருத்தை தொடர்ந்து கூறிவந்த நிலையில் முன்னாள் ராணுவ தளபதி நரவனேவும் இதே கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் தேசத்தின் பாதுகாப்புக்கே ஆபத்து என எச்சரித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications