மணிப்பூர்: மத்திய பாஜக அரசை கண்டித்து 'ரத்தம் தெறித்த’ கோவை காயக்கட்டு நூதன ஆர்ப்பாட்டம்!
கோவை: மணிப்பூர் வன்முறைக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காயக்கட்டு போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Recommended Video
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் 2 மாதங்களாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மணிப்பூரை விட்டு வெளியேறி உள்ளனர். மிசோரம், நாகாலாந்து, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மியான்மார் எல்லைப் பகுதிகளுக்கும் அகதிகளாக இரு இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் மணிப்பூர் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

மணிப்பூரி 50,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 2 மாத கால வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. இந்ஹ்ட நிலையில் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதனிடையே மணிப்பூர் வன்முறைக்கு காரணமான, மைத்தேயி மக்கள் பக்கம் நிற்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நூதன போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூரின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் காயக்கட்டுகளுடன் தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) June 24, 2023
போரின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் போரால் பாதிக்கப்பட்டவர்களைப் போல காயக்கட்டுகளுடன் போராட்டம் நடத்துவது தந்தை பெரியார் தி.க.வின் பாணி. ஈழ விடுதலைப் போராட்ட காலங்களிலும் இதேபோல தமிழ்நாடு முழுவதும் காயக்கட்டுப் போராட்டங்களை கோவை ராமகிருட்டிணன் நடத்தி இருந்தார். கோவையில் நேற்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகள், மதிமுக, மமக, எஸ்டிஎப்ஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications