"கொடூரம்!" மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை! ஆம்புலன்ஸை கூட விடவில்லை!
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குக்கி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூர்: இதன் காரணமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறையான ஒரு சூழலே நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்படும் போதிலும் அவை பெரியளவில் பயன் தருவதாக இல்லை. கடந்த ஒரு மாதமாகவே அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கே சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
அங்கே ஏற்கனவே இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த சூழலில், நிலைமை, அங்கே இன்னும் அமைதி திரும்பாத சூழலில் வரும் ஜூன் 10ஆம் தேதி வரை இணையச் சேவை முடக்கம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூரில் நடந்த ஒரு கொடூரம் குறித்த ஷாக் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மணிப்பூரில் லாம்சாங் பகுதியை அடுத்துள்ள ஐரோசெம்பா என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
கொடூரம்: அதாவது மூன்று பேரை ஏற்றிக்கொண்டு ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸ் மற்றும் மாருதி ஜிப்சி ஆகிய வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரிய குழு ஒன்று அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அவர்கள் யார் என விசாரித்த அந்த கும்பல், அப்படியே 3 பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளது. இதில் வெறும் 8 வயதே ஆன சிறுமியையும் இப்படி கொடூரமாகக் கொன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த கும்பல் ஆம்புலன்சை எரித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஜூன் 4ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
ஷாக் சம்பவம்: முன்னதாக ஜூன் 4ஆம் தேதி அதிகாலையில், இந்தியத் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரஞ்சித்தின் வீடு உட்பட, கக்சிங் மாவட்டம் சுக்னு என்ற பகுதியில் இருந்த இரண்டு கிராமங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் எம்எல்ஏ வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சம்பலானது.
அதேபோல ஜூன் 3ஆம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ என 4 பேரை சுக்னு பஜார் காங்கிரஸ் கட்டிடத்தில் உள்ளூர் மக்களே பிடித்து வைத்திருந்தனர். அவர்களை சில மணி நேரம் கழித்தே மக்கள் விட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறுவதால் அங்கே பதற்றமான ஒரு சூழலே உருவாகியுள்ளது. அங்குப் பாதுகாப்பிற்காக சுமார் 10,000க்கும் மேற்பட்ட அசாம் ரைபிள் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அங்கே அமைதி திரும்புவதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications