பீகாரின் 'விகே பாண்டியன்’-நிதிஷ்குமாரின் வாரிசு? ஜேடியூவில் இணைந்த மாஜி ஐஏஎஸ் அதிகாரி- யார் இவர்?
பாட்னா: ஒடிஷா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விகே பாண்டியன் ஒரு கட்டத்தில் ஒடிஷாவின் ஆளும் கட்சியான பிஜேடியின் தலைவரான நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக, அடுத்த அரசியல் வாரிசாக உருவெடுத்தார். தற்போது அதே பாணியில் பீகார் மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மிக நெருக்கமானவருமான மணீஷ் குமார் வர்மா ஜேடியூ கட்சியில் இணைந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அப்போது அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் விகே பாண்டியன் எனும் தமிழர். ஒடிஷாவில் அடுத்த முதல்வராக ஒரு தமிழர் ஆளத்தான் போகிறாரா? ஒடிஷா மக்களே அனுமதிக்கப் போகிறீர்களா? என பாஜக அதிகமாக கேள்வி எழுப்பியது. ஒடிஷா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அந்த விகே பாண்டியன் எனும் தமிழரின் அரசியல் அத்தியாயமே முடிவுக்கும் வந்தது. ஒட்டுமொத்த அரசியலில் இருந்தும் அவர் விலகும் நிலைமை உருவானது.

ஜேடியூவில் நிதிஷ், ஜா: தற்போது இதேபோன்ற ஒரு அரசியல் சூழ்நிலை பீகாரில் உருவாகி உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைவராக உள்ள ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்), மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஜேடியூவின் செயல் தலைவராக கடந்த மாதம்தான் ராஜ்யசபா எம்பி சஞ்சய் குமார் ஜா நியமிக்கப்பட்டார். நிதிஷ்குமாருக்கு அடுத்ததாக ஜேடியூவின் தலைவராக சஞ்சய் குமார் ஜா நியமிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பது பொதுவான கருத்து.
ஜேடியூவில் மணீஷ் குமார் வர்மா: இந்த பின்னணியில் திடீரென ஜேடியூ கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் குமார் வர்மா இணைந்திருக்கிறார். நிதிஷ்குமாரின் வலது கரம், நிதிஷ்குமாரின் மனசாட்சி எனப் பேசப்பட்டவர்- விமர்சிக்கப்பட்டவர்தான் மணீஷ் குமார் வர்மா. இதனால் ஜேடியூவின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட அதிருப்தியில் இருந்தும் வந்தனர். தற்போது ஜேடியூவிலேயே மணீஷ் குமார் வர்மா இணைந்திருக்கிறார். ஜேடியூவில் விரைவில் மணீஷ் குமார் வர்மா புயலாக வீசக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஒடிஷா டூ பீகார்: யார் இந்த மணீஷ் வர்மா?: 2000-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் குமார் வர்மா. 3 ஆண்டுகளுக்கு முன்னர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவர். ஒடிஷா மாநில ஐஏஎஸ் கேடர். 12 ஆண்டுகள் ஒடிஷாவில் பணியாற்றிவிட்டு பீகார் மாநிலத்துக்கு திரும்பினார் மணீஷ் குமார் வர்மா. பாட்னா ஆட்சியராக (மாவட்ட மாஜிஸ்திரேட்), மாநில மிந்துறை நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றினார். பீகார் மாநில பணிக் காலம் முடிவடைந்ததும் ஒடிஷாவுக்கு திரும்பவில்லை. விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். அப்போது பீகார் முதல்வரின் கூடுதல் ஆலோசகரானார். அம்மாநில பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவராக பணியாற்றினார்.
ஒரே ஜாதி: முதல்வர் நிதிஷ்குமார் குர்மி ஜாதியைச் சேர்ந்தவர். மணீஷ் குமார் வர்மாவும் குர்மி ஜாதியைச் சேர்ந்தவரே. நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் பொதுவாக அரசியல் வெளியில் தலைகாட்டுவதே இல்லை. இதனால் ஜேடியூவின் அடுத்த வாரிசாக நிஷாந்த் வர வாய்ப்பில்லை என கூறப்பட்டு வந்தது. இந்த தருணத்தில் நிதிஷ்குமாரின் வலதுகரமான மணீஷ் குமார் வர்மா, ஜேடியூவில் இணைந்திருக்கிறார். இதனால் அவரே நிதிஷ்குமாரின் அடுத்த வாரிசு, ஜேடியூவின் புதிய தலைவராக இருக்கக் கூடும் என்கின்றன பீகார் அரசியல் வட்டாரங்கள்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications