சசிகலாவுக்காக வாதாடுவது மணிசங்கர்தான்.. மணிசங்கர அய்யர் அல்ல!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகவுள்ள நிலையில், சசிகலாவுக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான மணிசங்கர அய்யர் வாதாடவுள்ளதாக ஒரு செய்தி வெளியானது.
ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது. உண்மையில், சசிகலாவுக்காக மணிசங்கர் என்ற வழக்கறிஞர்தான் நீண்ட காலமாக வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சார்பில் தலா 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்ற விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வருகின்றன.
தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் மனுக்களில் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications
