கடும் எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர்

அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் குறித்து நேற்று காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கு கொண்டனர்.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு, பிரதமர் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கலாம் என முடிவுசெய்யப் பட்டதாகத் தெரிகிறது. மேலும், அதில் ‘காமன்வெல்த் மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை' என்று காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications