காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை!

இலங்கையில் வருகிற 15ஆம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய உயர்நிலைக்குழுவும் பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும், எனினும், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications