ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என்பது யாருக்கு தெரியுமா பயங்கர ஷாக்?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
ராஞ்சி/ராய்ப்பூர்: மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தாலும் உண்மையில் இந்த அறிவிப்பால் பேரதிர்ச்சிக்குள்ளாகி இருப்பது மாவோயிஸ்டுகள்தான்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்த நந்த கிஷோர் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடந்த 10-ந் தேதியன்று ரூ25 லட்சம் ரொக்கத்துடன் வங்கிக்கு சென்றார். அவரை வழிமறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பணம், மாவோயிஸ்டுகளுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தங்களிடம் உள்ள பணத் தாள்களை மாற்றும் முயற்சியில் மாவோயிஸ்டுகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் தங்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளின் பெரும் முதலாளிகள் முதல் கிராம மக்கள் வரை அனைவரிடமும் பணத்தை கொடுத்து வங்கிகளில் மாற்ற சொல்லுகின்றனர்.
இதனால் மாவோயிஸ்டுகல் நடமாடும் பகுதிகளில் வங்கிகள் மீதான கண்காணிப்பை பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர். தற்போதைய நிலையில் பெருநிறுவனங்களிடம் இருந்து மாவோயிஸ்டுகள் வரியாக வசூலித்துள்ள தொகை மட்டும் ரூ7,000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது இவ்வளவு பெரிய தொகுதியை உடனே மாற்ற வேண்டியாக நெருக்கடியில் மாவோயிஸ்டுகள் உள்ளனர். இனிவரும் நாட்களில் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் பெரும் தொகையான பணத்துடன் பிடிபடும் செய்திகள் வரும் என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications