Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்: வேளாண் சட்டம், அன்றே கணித்த ராகுல்: வைரலாகும் காணொளி

Subscribe to Oneindia Tamil

பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்து போராடிய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது சொன்ன வார்த்தை மார்க் மை வார்ட், மத்திய அரசு காட்டாயம் இந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் நாள் கட்டாயம் வரும் என்று தெரிவித்திருந்தார். அதன் படி நடந்துள்ளது. தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் எழும் சிக்கல்களை தெளிவாக அறுதியிட்டு கூறுவது ராகுலின் வாடிக்கை, ஆனால் அவரை பப்பு (சின்னப்பையன்) என கேலியும் கிண்டலுமாக கூறுவது பாஜக தலைவர்களின் வாடிக்கை. தான் பப்பு அல்ல நாட்டின் நலனில் அக்கறை கொண்டவன் சரியான புரிதல் உள்ளவன் என பலமுறை ராகுல் உணர்த்தியுள்ளார். 2019 ஆண்டு ஜனவரியிலேயே கொரோனா எனும் பெரும் தொற்று வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என எச்சரித்தார்.

ஆனால் இந்தியாவில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அலட்சியம் செய்தனர். கொரோனா கூட பரவாயில்லை அதற்கு பின் வரும் பொருளாதார நெருக்கடியை நினைத்து அஞ்சுகிறேன் என்று சொன்னார். அப்போதும் 5 ட்ரில்லியன் டாலர் என கேலி பேசினர். ஆனால் கொரோனாவுக்குப்பின் நாடே பெரும் நெருக்கடியில் சிக்கியது. தனிநபர் வாழ்க்கை அதளபாதாளத்திற்கு சென்றது. இதேபோன்று பணமதிப்பு நீக்க விவகாரத்திலும் அவர் சொன்னது சரியாக இருந்தது.

mark my words,Rahul who predicted that day,Trending video

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள்

1.வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020, 2.விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020, 3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 என மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவை சட்டமானது.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சுதந்திரப்போராட்டத்திற்கு பின் இவ்வளவு பெரிய போராட்டம், நீண்ட கால போராட்டம் நடந்திருக்குமா என்று எண்ணும் அளவுக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் வட மாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக முற்றுகை போராட்டத்தை மாற்றினர்.

mark my words,Rahul who predicted that day,Trending video

எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்காமல் முழுக்க முழுக்க விவசாயிகள் பங்கேற்ற போராட்டம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. 11 கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இறுதியில் இறங்கி வந்த மத்திய அரசு 3 வேளாண்சட்டங்களை வாபஸ் பெற்றது. பிரதமர் மோடி இன்று அறிவிப்பை வெளியிட்டார்.

ட்ரெண்டாலும் ராகுலின் பேச்சு

3 வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து தொடர் பிரச்சாரம் செய்து வந்த ராகுல் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒருநாள் நிச்சயம் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் என்று கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துக் கொண்டபோது உறுதியாகத் தெரிவித்திருந்தார். அவர் கூறிய வார்த்தைகள் அந்த பேட்டி காணொளி வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். ஜல்லிக்கட்டு முடிந்து டெல்லி புறப்படும் முன் மதுரை விமானநிலையத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியில் அளித்தார். அந்தப்பேட்டியில் " விவசாயிகள் போராட்டத்தை கண்டு பெருமை அடைகிறேன், அவர்களுக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. என்னுடைய வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள், இந்த 3 வேளாண் சட்டங்களையும், மத்தியில் ஆளும் அரசு வலுக்கட்டாயமாகத் திரும்பப் பெறும் நிலை ஏற்படும். நான் கூறியதை நினைவில் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

மோடி அறிவிப்பும் வைரலாகும் ராகுல் பேட்டி வீடியோவும்

பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தபின், ராகுல் காந்தி கடந்த ஆண்டு பேசியது குறித்த காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பப்பு இல்ல நான், மார்க் மை வார்ட் என்று ராகுல் படத்தையும் காணொளியையும் போட்டு வைரலாக்கி வருகின்றனர். ராகுல் காந்தி அன்று அளித்த பேட்டியை என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், விவசாய விரோதச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும். என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தீர்க்கத்தரிசனமான ராகுலின் வார்த்தை-மாணிக் தாகூர்

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில் " ராகுல் காந்தியின் வார்த்தை இன்று தீர்க்க தரிசனமாக இருக்கிறது. மதுரை மண்ணில் கால்வைத்து ராகுல் காந்தி அன்று பேசியது, இன்று நடந்துள்ளது. அதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அறுவடைத் திருநாளன்று கறுப்புச் வேளாண்சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியிருந்தார். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக விடாப்படியாக இருந்தார்கள், அவர்களுக்கு காங்கிரஸ் பக்கபலமாக இருந்தது.

வேளாண் சட்டங்களில் மட்டும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு சரியாக இருந்தது என்பதல்ல, கொரோனா வைரஸ் நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன் கூட்டியே கணித்தார், பணமதிப்பிழப்பு குறித்தும் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக எச்சரித்தார். அவை அனைத்தும் உண்மையாகவே நடந்துவிட்டன. இந்த வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வைத்தமைக்கு முழுமையான காரணம் விவசாயிகள்தான்"
என மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+