ரியோ ஒலிம்பிக்ஸ்சில் பங்கேற்க வாய்ப்பு மறுப்பு- மேரி கோம் கனவு தகர்ந்தது
மும்பை: இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு ஒலிம்பிக் கமிட்டி மறுத்துள்ளது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 33. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 முறை தங்கம் வென்றவர். கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் கைப்பற்றி சாதித்தார். இம்முறை அவரால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குத்துச்சண்டை ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
5 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் மேரி கோம் தோல்வியடைந்தார். எனினும், வைல்டு கார்டு எனும் சிறப்பு பிரிவின் மூலம் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கு வாய்ப்பை மேரி கோம் இழந்தார் என இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் கிஷன் நார்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ள இந்திய குத்துச்சண்டை சங்க தலைவர் கிஷன் நார்சி, மேரி கோம் பங்கேற்க முடியாததற்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் முடிவே காரணம். ஒலிம்பிக் சங்கத்தின் முடிவை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. இதனால், மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கஜகஸ்தானில் நடந்த உலக குத்துச்சண்டை தொடரின் 2வது தொடரில் மேரி கோம் தோல்வியடைந்தார். இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால், வைல்டுகார்டு நுழைவு எனப்படும் சிறப்பு அனுமதி பெற இந்திய குத்துச்சண்டை சங்கம் முயற்சி செய்து வந்தது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் பங்கேற்க அனுமதி கோரி இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுத்துவிட்டது. இதனால், மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Mary Kom denied wild card entry into #RioOlympics by International Olympic Committee: Chairman of AIBA ad-hoc committee Kishan Narsi.
— ANI (@ANI_news) June 23, 2016
கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் கைப்பற்றி சாதித்தார். இம்முறை அவரால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குத்துச்சண்டை ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications