Sikkim Avalanche: சிக்கிம் பனிச் சரிவு: பலி எண்ணிக்கை 7; மீட்பு பணிகள் நிறுத்தம்
காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தேசிய பேரிடர் மீட்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

7 பேர் உயிரிழப்பு
தசிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை என 7 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சிஆர்ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிக்கிம் மாநில போலீசார், சிக்கிம் டிராவல் ஏஜெண்டுகள் சங்கம், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவமும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
சிக்கிம் காவல்துறை உயர் அதிகாரி சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், பனிச்சரிவு இருப்பதால் 13-வது மைல் வரை செல்லத்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் கட்டாயப்படுத்தியே சென்றனர். இதனால் 15-வது மைல் பகுதியில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்றார். இதனிடையே, மீட்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

விவரம் விரைவில் வெளியிடப்படும்
இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நிறுத்தம்
இதனிடையே, பனிச்சரிவு ஏற்பட்ட அதேபகுதியில் மீண்டும் ஒரு பனிச்சரிவு மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவும் ஆரம்பித்ததால் மீட்பு பணிகள் ஆபத்தானதாக மாறும். மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

சாலை மூடப்பட்டுள்ளது
பனிச்சரிவுகள் மீண்டும் ஏற்படுவதால் ஜவஹர்லால் நேரு சாலை மூடப்பட்டுள்ளது எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சாங்கு ஏரி பகுதிக்கு செல்லும் பகுதியில் கடும் பனிப்பொழிவில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கினர். ஆப்ரேஷன் ஹிம்ராஹத் பெயரில் சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications