டெல்லி அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி-10 பேர் காயம்
டெல்லி: ஷதாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஷதாரா பகுதியில் உள்ள மோகன் பார்க்கில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இங்கு, அப்பகுதியில் இயங்கும் மின்சார ரிக்ஷாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையிக்கு ,இன்று காலை 5 மணியளவில் தகவல் வந்தது. இதையடுத்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊர்திகளில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரிக்ஷாக்களில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications