தலைதூக்கும் குடும்ப அரசியல்! பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்த்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி உள்ளார். இந்நிலையில் தான் தனக்கு பிறகு கட்சியை தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த் தலைவராக கட்சியை வழிநடத்துவார் என இன்று அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். மாயாவதி திருமணம் செய்து கொள்ளவில்லை.

Mayawati announces her successor of Bahujan samaj party is Nephew Akash Anand? Who is he? details here

தற்போது அவருக்கு 67 வயது ஆகிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தர பிரதேசம் தவிர ராஜஸ்தான் உள்பட பிற மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார். அதாவது தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். இவர் தான் தனக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார் என தெரிவித்தார். ஆகாஷ் ஆனந்த் என்பவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆவார்.

கடந்த ஆண்டு முதலே ஆகாஷ் ஆனந்த் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவர் என்ற பேச்சு அடிப்பட்டு வந்த நிலையில் இன்று உறுதியாகி உள்ளது. தற்போது ஆகாஷ் ஆனந்த்துக்கு 31 வயது ஆகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இடம்பிடித்தார்.

மேலும் கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் அல்வாரில் அம்பேத்கரின் பிறந்தநாளில் 13 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை நடத்தினார். இது கட்சிக்கு உத்வேகம் அளித்தது. இதற்கிடையே தான் ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தலைவராக மாயாவதி அறிவித்துள்ள நிலையில் அவரது கட்சியிலும் குடும்ப அரசியல் தலைதூக்குகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+