மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
பாட்னா: மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் உள்ள பூங்காவை ஸ்வாதீன் பாரத் சுபாஷ் சேனா என்ற அமைப்பை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தர்ணா நடத்துவதாக பொய் கூறி ஆக்கிரமித்தனர். 260 ஏக்கர் நிலப்பரப்பிலான இந்த பூங்காவை ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற மாவட்ட அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் களம் இறங்கினர். போலீஸார் பூங்காவில் தங்கியிருந்தவர்களை வெளியேறுமாறு கூறியபோது, ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது. மோதலை கண்டுக்குள் கொண்டுவர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் எஸ்.பி. உள்பட 2 பேர் பலியானார்கள்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முழு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மதுராவில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரா கலவரம் குறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மதுரா கலவரம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத்தை ஆட்சி செய்யும் உத்தர பிரதேச அரசு, மதுரா விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் மாநில முதல் அமைச்சர் பண்டல்க்ண்ட் செல்வதாகவும் மதுராவிற்கு செல்லவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications