முசாபர்நகர் கலவரம்.. உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்க: ஜனாதிபதியிடம் மாயாவதி மனு

இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று நேரில் சந்தித்த மாயாவதி. முசாபர்நகர் கலவரத்தைத் தடுக்க தவறிய அகிலேஷ் யாதவ் அரசை அரசியல் சாசன சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறிய அவர், முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அப்பாவிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே காரணத்தைக் கூறி உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.
தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications