ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா.

மத்திய அரசு ஹிந்திக்கு முக்கியத்துவம் தரும் நிலையில் இன்று முதல் ஹிந்தி யில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹிந்தி யை தேசிய அளவில் பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரையை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு பரிந்துரைத்தது.

MBBS to be taught in Hindi: Minister Amit Shah to start his curriculum in Madhya Pradesh today

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஹிந்தி யை கொண்டு வருவது, போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தி யை மட்டும் பயன்படுத்துவது போன்ற பரிந்துரைகளை அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு மேற்கொண்டது.

இந்த பரிந்துரைகள் தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த பரிந்துரைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கடுமையான குரல்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் இந்த பரிந்துரையை எதிர்த்து மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. நேற்று தமிழ்நாடு முழுக்க திமுகவினர் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். திமுக இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுக்க இதற்காக போராட்டங்கள் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசை தாண்டி கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன. மத்திய அரசு ஹிந்தி க்கு முக்கியத்துவம் தரும் நிலையில் இன்று முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தி யில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தி அதிகாரபூர்வ மாநில மொழி என்பதால், அங்கே முதல் கட்டமாக ஹிந்தி யில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. இன்று ஹிந்தி யில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் புத்தகங்களை அமித்ஷா வெளியிடுவார்

இந்த திட்டம் 3 மூலம் பாடங்கள் முதல் கட்டமாக ஹிந்தி யில் கற்பிக்கப்படும். ஹிந்தி யாவில் ஹிந்தி யில் மருத்துவ கல்வி தொடங்குவது இதுவே முதல்முறை. ஹிந்தி யில் படித்தால் வேலைவாய்ப்பு இருக்கும். ஹிந்தி யில் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்திருந்தார்.

13 அரசு மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஹிந்தி வழிப் பாடம் தொடங்கப்பட உள்ளது. மொத்தமாக உடற்கூறியல் ,உடலியல் , உயிர் வேதியியல் ஆகிய மூன்று பாடங்கள் மட்டும் ஹிந்தி யில் கற்பிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+