உ.பியில் ஆடு, மாடு வெட்ட தடை விதித்ததன் எதிரொலி... டெல்லியில் இறைச்சி விலை வீர்ர்ர்!!
உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆடு, மாடுகளை வெட்ட அம்மாநில முதல்வர் தடைவிதிதுள்ளதையடுத்து டெல்லியில் இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற கையோடு யோகி ஆதித்ய நாத் அம்மாநிலத்தில் ஆடு, மாடுகளை வெட்ட தடைவிதித்தார். மேலும் அனுமதி இல்லாமல் செயல்படும் இறைச்சிக் கூடங்களையும் இழுத்து மூட உத்தரவிட்டார்.
இதனைக் கண்டித்து இறைச்சி வியாபாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இறைச்சி விநியோகம் முடங்கியுள்ளது.

பக்கத்து மாநிலங்களில் இருந்து..
இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தால் அண்டை மாநிலமான டெல்லிக்கு இறைச்சி வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலும் டெல்லிக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்துதான் இறைச்சி கொண்டுவரப்படுகிறது.

உ.பியிலிருந்து நிறுத்தம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் போராட்டத்தால் டெல்லிக்கு அங்கிருந்து இறைச்சி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் இறைச்சி போதுமான அளவு இல்லாததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கிடுகிடுவென உயர்வு
டெல்லியில் தினமும் 40 ஆயிரம் கிலோ எருமை மாட்டு இறைச்சியும், 80 ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சியும் விற்பனை ஆகும். அந்த அளவுக்கு இறைச்சிவரத்து இல்லாததால் இதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ரூ.40 முதல் ரூ 60 வரை உயர்வு
ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.40-ல் இருந்து ரூ.60 வரை உயர்ந்துள்ளது. ரூ.380-ல் இருந்து ரூ.400 வரை விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி தற்போது ரூ.500 வரை உயர்ந்து விட்டது. எருமை மாட்டு இறைச்சி ரூ.170-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்து இருக்கிறது.

அசைவ பிரியர்கள் பாதிப்பு
இறைச்சி விலை திடீர் உயர்வால் டெல்லி அசைவ பிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் மட்டுமே டெல்லியில் இறைச்சி விலை குறையும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications