'தில்' இருந்தா குஜராத்தின் அவலத்தை எக்ஸ்போஸ் செய்யுங்கள்... மீடியாக்களுக்கு கெஜ்ரிவால் சவால்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மீடியாக்களுக்குத் துணிச்சல் இருந்தால் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தின மறுபக்கத்தை, இருண்ட பக்கத்தை, அவலத்தை மீடியாக்கள் வெ்ளிச்சம் போட்டுக் காட்டட்டும். ஆனால் அவர்கள் ஏன் அதுகுறித்து கவலையே படுவலதில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கு உண்மையில் தைரியம் இல்லை என்று ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் காட்டமாக கூறியுள்ளார்.

Media has no guts to expose Modi's Gujarat: Kejriwal

பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் கெஜ்ரிவால். அப்போது அவர் மீண்டும் மீடியாக்களை விமர்சித்தார்.

கெஜ்ரிவால் கூறுகையில், குஜராத் மாநிலத்தின் இருண்ட பக்கத்தை வெ்ளிச்சம் போட்டுக் காட்டும் தைரியம் மீடியாக்களுக்கு இல்லை. அவர்கள் முன்வருவதில்லை.

மோடியை அம்பலப்படுத்த மீடியாக்களுக்குத் தைரியம் இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன். மோடி சொல்லும் பொய்களையும், அவர் பேசும் பொய்யான பேச்சுக்களையுமே திரும்பத் திரும்ப மீடியாக்கள் வெ்ளிச்சமிடுகின்றன. வளர்ச்சி கண்டுள்ளதாக மோடி கூறுகிறார். அதன் உண்மை நிலை தெரியாமல் அதையே திரும்பத் திரும்ப மீடியாக்களும் கூறுகின்றன.

மோடி கூறுவது போல குஜராத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அவர் சொல்லும் அத்தனையும் பொய். அதை வெளிப்படுத்த மீடியாக்கள் முன்வர வேண்டும்.

மோடி ஆட்சிக்காலத்தில் இதுவரை குஜராத்தில் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 16000 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மைகளை எந்த மீடியாவும் இதுவரை வெளியில் கொண்டு வரவில்லை.

எல்லா மாநிலங்களையும் போல குஜராத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை நான் சமீபத்தில் குஜராத்துக்குச் சென்ற போது அறிய முடிந்தது. மோடி முதல்வரான பின்னரும் கூட ஊழலும், லஞ்சமும் அங்கு குறையவில்லை. இதையெல்லாம் ஏன் மீடியாக்கள் சொல்வதில்லை. இப்படிப்பட்டதை மக்களிடம் சொல்ல வேண்டியது மீடியாக்களின் கடமை இல்லையா...

பொதுத் தேர்தலுக்கு முன்பு குஜராத்தின் இருண்ட பக்கத்தையும், மோடியின் பொய் முகத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்த மீடியாக்கள் முன்வர வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+