உடமைகளை இழந்து தவிக்கும் மாணவர்கள்.. ஒடிசாவில் இன்று நீட் தேர்வு ஒத்திவைப்பு!
ஃபனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
புவனேஷ்வர் : ஃபனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ஃபனி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா அருகே கரையை கடந்தது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை பலநூறு மரங்கள் விழுந்து இருக்கிறது.

இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிக்காக தேசிய மீட்பு படையினர் களமிறங்கி இருக்கிறார். பல ஹெலிகாப்டர்கள் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
இந்த புயலில் மரம் விழுந்தும், நீரில் மூழ்கியும் 10 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் வரை இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல மாண்வர்கள் தங்கள் உடமைகளை, புத்தகங்களை இழந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஃபனி புயல் காரணமாக ஒடிசாவில் இன்று நீட் தேர்வு நடக்கவில்லை. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. ஆனால் ஒடிசாவில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள் தங்கள் உடமைகளை இழந்து உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு 1 மாதத்திற்கு பிறகே தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு மாற்று தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications