பேசாம அந்த பாபாஜியை மறந்துடுங்க.. "கிரிட்டிக்கல்" கேள்வி கேட்டவருக்கு செக்ஸ் நிபுணர் கொடுத்த பதில்!
மும்பை: மும்பை மிர்ரர் பத்திரிகையில், செக்ஸ் சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதில் தரும் செக்ஸ் நிபுணர் ஒருவர், தனக்கு வந்த மிகவும் சிக்கலான ஒரு கேள்விக்கு சாதுரியமாக பதிலளித்தது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மிர்ரர் இதழில், டாக்டர் மஹிந்தர் வத்சா என்பவர் செக்ஸ் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார்.
அவரிடம் ஒரு நூதனமான கேள்வியைக் கேட்டிருந்தார் வாசகர் ஒருவர். அந்தக் கேள்விக்கு டாக்டர் வத்சா மிகவும் சாதுரியமாக பதிலளித்திருந்தார்.
இது வாசகர் கேட்ட கேள்வி:
கேள்வி: எனக்கு 35 வயதாகிறது. எனக்குத் திருமணமாகி 7 வருடங்களாகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நானும், எனது மனைவியும் ஒரு பாபாஜியை (சாமியாரை) சந்தித்தோம். அவரிடம் எங்களுக்கு குழந்தை இல்லாதது குறித்து கூறி நிவாரணம் கேட்டோம். அவரும் ஒரு மருந்தைக் கொடுத்து இருவரையும் சாப்பிடக் கூறினார். பின்னர் 2 நாள் ஆசிரமத்தில் தங்கியிருந்து விட்டுச் செல்லுமாறும் கூறினார். அதன்படி நாங்களும் தங்கினோம்.
அதன் பின்னர் எனது மனைவி கருத்தரித்தார். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பாபாஜியின் ஆசிர்வாதத்தால்தான் தனக்குக் குழந்தை பிறந்ததாக எனது மனைவி கூறுகிறார். ஆனால் அந்த பாபாஜி எனது மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதால்தான் குழந்தை பிறந்ததாக எனக்கு சந்தேகமாக உள்ளது.
நானும் எனது மனைவியும் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது பாபாஜி எனது மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கலாம் என நான் கருதுகிறேன். குழந்தையும் கூட அந்த பாபாஜி மாதிரியே இருக்கிறான்.
மேலும் அந்த பாபாஜி என்னுடனும் உறவு வைத்துக் கொண்டதாக சந்தேகப்படுகிறேன். காரணம் எனக்கு கடுமையான முதுகு வலி உள்ளது. ஆசிரமத்திற்குப் போய் விட்டு வந்த பிறகுதான் இந்த முதுகு வலி வந்தது.
அந்த மருந்து வசிய மருந்தாக இருக்கலாம் என்று கருதுகிறேன். நான் அந்த பாபாஜி மீது வழக்குப் போடலாமா என்று கேட்டுள்ளார் அந்த வாசகர்.
அதற்கு டாக்டர் வத்சாவின் பதில் இது:
உங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள் முதலில். உங்களது மனைவி மீதான சந்தேகத்திலிருந்து வெளியே வாருங்கள். பாபாஜியை மறக்க முயலுங்கள். நீங்கள் அவர் மீத நடவடிக்கை எடுத்தால், அது தேவையில்லாத நீண்ட நெடிய கோர்ட் வழக்காக மாறும். உங்களது பணமும் வீணாகும். வக்கீலுக்குக் கொடுத்தே ஓய்ந்து போக நேரிடும் என்று டாக்டர் வத்சா பதிலளித்துள்ளார்.
செக்ஸில்தான் சிக்கல் வரும் என்று பார்த்தால் செக்ஸால் கூட சிக்கல் வரும் போலிருக்கே!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications