For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமங்கலம், ஆர்கே நகர் எல்லாம் ஜுஜிபி.. பாஜகவை கதறவிட்ட மேகாலயா காங்கிரஸின் மெர்சல் 'பர்சேஸ்'

மேகாலாயாவில் வாக்காளர்களுக்கு நலத் திட்டத்தின் பெயரால் பணத்தை வாரி இறைத்திருக்கிறது ஆளும் காங்கிரஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    மேகாலயா பாஜகவை கதறவிட்ட காங்கிரஸின் திட்டம்

    ஷில்லாங்: பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் பேரவலம் தமிழகத்தில்தான் என புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேகலாயாவில் ஆளும் காங்கிரஸ் வாக்காளர்களைக் கவர மேற்கொண்ட நடவடிக்கையால் ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட துடிக்கும் பாஜக கதறியேவிட்டது.

    மேகலாயா சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது.

    தேசியவாத காங். தனித்து போட்டி

    தேசியவாத காங். தனித்து போட்டி

    காங்கிரஸுடன் கை கோர்த்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிடுகிறது.

    திடீரென வந்த செக்

    திடீரென வந்த செக்

    பாஜகவின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் தடலாடியாக ஆளும் காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த வாரம் மேகலாயாவில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளில் அரசு சார்பாக பெண்களுக்கு தலா ரூ5,000 செக் சென்றடைந்துள்ளது.

    அரசு பணத்தை அள்ளிவிட்ட காங்கிரஸ்

    அரசு பணத்தை அள்ளிவிட்ட காங்கிரஸ்

    எதற்காக இந்த செக் என தெரியாமலேயே பெண்கள் வங்கிகளுக்குப் படையெடுத்து பணமாக்கினர். பின்னர்தான் தொகுதி எம்.எல்.ஏக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க அரசு பணத்தை 'பெண்கள் மேம்பாட்டு நிதி உதவி' என்ற பெயரில் அள்ளிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

    காங்கிரஸ் தடாலடி

    காங்கிரஸ் தடாலடி

    தேர்தல் நெருங்கும் நிலையில் மேகலாயா காங்கிரஸ் அரசு வாக்காளர்களை விலைக்கு வாங்கவே இந்த நடவடிக்கை என குற்றம்சாட்டியது பாஜக. ஆனால் பெண்கள் மேம்பாட்டு நிதியை பெண்களுக்கு தருவதை பாஜக எதிர்க்கிறதா? என ப்ளேட்டை திருப்பி போட்டு தெறிக்க விட்டிருக்கிறது காங்கிரஸ்.

    மெர்சல் பர்சேஸ்தான்!

    சர்ச்சுகளுக்கு நிதி கொடுத்த பாஜக

    சர்ச்சுகளுக்கு நிதி கொடுத்த பாஜக

    முன்னதாக மேகலாயவின் 37 தேவாலயங்களுக்கு சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ70 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது மத்திய அரசு. தேவாலயங்கள், மசூதிகள், காசி பழங்குடி மக்களின் புனிதத் தலங்களை மேம்படுத்துவதற்கு நிதி உதவி செய்தது மத்திய பாஜக அரசு. தேர்தலை மனதில்கொண்டுதான் இந்த திட்டங்களை அமல்படுத்தியது பாஜக என காங்கிரஸ் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Meghalaya Voters got cheques worth Rs 5,000 ahead of the Assembly Elections by ruling Congress Govt. BJP accused the Congress Govt of wooing people with money.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X