அந்த 15 பேரும் உயிரோட இருக்க வாய்ப்பில்லை.. மேகாலயாவில் கைவிரித்த மீட்பு குழு.. கதறும் குடும்பம்!
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரும் இறந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.
அப்போது சிக்கிய இந்த ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 14 நாட்களாக அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

எதுவும் இல்லை
இவர்கள் எங்கே இருக்கிறார்கள். என்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் கடந்த 14 நாட்களாக உணவு தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணி நிறுத்தம்
போதிய உபகரணங்கள் இல்லாததால் தற்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை கொண்டு வர வேண்டும் என்று மீட்பு பணி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக அங்கு எந்த விதமான மீட்பு பணியும் செய்யபடவில்லை.

சந்தேகம்தான்
மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.14 நாட்களாக மீட்புபணி நடந்தும் ஒருவர் கூட மீட்கப்படவில்லை. இதனால் அவர்கள் 15 பேரும் இருந்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

கொடூரம்
இவர்களின் குடும்பம் தற்போது பெரும் பதற்றத்தில் இருக்கிறது. மீட்பு படையினர் கைவிட்டதை அடுத்து இவர்கள் கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு தங்கள் உறவினர்களுக்காக காத்து இருக்கிறார்கள். சுரங்கம் இருக்கும் இடத்திற்கு வெளியே கடவுள் படங்களை வைத்து வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications