மேகாலயா, நாகாலாந்தில் நாளை சட்டசபை தேர்தல்.. பலத்த பாதுகாப்பு
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஷில்லாங்/கோஹிமா: மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அம்மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இம்மாநிலத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிடுவது என முனைப்புடன் உள்ளது பாஜக. வழக்கம்போல பிரதான கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரையும் வளைத்துப் போட்டு தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

மோடி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மத்திய அமைச்சரான அல்போன்ஸ் இம்மாநிலத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.

372 வேட்பாளர்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்தனர். மேகாலயாவில் மொத்தம் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 18,30,104 வாக்காளர்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். இதற்காக 3,082 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவாலயங்கள் எச்சரிக்கை
மேகாலயாவைப் போல நாகாலாந்தும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம். மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக எனும் இந்துத்துவா கட்சியை நாகாலாந்தில் இருந்து விரட்டியடியுங்கள் என தேவாலயங்கள் சார்பாக பகிரங்கமாக அறிக்கையும் விடப்பட்டிருந்தது.

195 வேட்பாளர்கள்
நாகாலாந்து தேர்தல் களத்தில் 195 வேட்பாளர்கள் உள்ளனர். முன்னாள் முதல்வர் ரியோ போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வாகிவிட்டார். மொத்தம் 11,70,548 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications