காஷ்மீர் பிரச்சனை.. பாஜகவிற்கு தனியாளாக டஃப் கொடுக்கும் மெகபூபா முப்தி.. அடுத்தடுத்த அதிரடி!

காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனி நபராக மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனி நபராக மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.

காஷ்மீரில் ''ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சி'' சார்பாக மெகபூபா முப்தி நடத்தி வந்த ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை லோக்சபா தேர்தலுக்கு முன் பாஜக கட்சி வாபஸ் வாங்கியது. இதனால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஆளுநர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ராணுவ முன்னேற்றம்

ராணுவ முன்னேற்றம்

அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. மத்திய அரசு அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது மொத்தமாக அங்கு புதிதாக 75000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தனி நபராக எதிர்ப்பு

தனி நபராக எதிர்ப்பு

இந்த நிலையில்தான் தற்போது காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனி நபராக மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாக செயல்பட்டு வருகிறார். நேற்று முதல்நாளே அவர் காஷ்மீரில் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். இரவு 11 மணிக்கு சென்று ஆளுநரை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து நெருக்கடி கொடுத்தார்.

என்ன நெருக்கடி

என்ன நெருக்கடி

எல்லா கட்சியினரும் சேர்ந்து வந்ததை எதிர்பார்க்காத அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அதிர்ந்து போனார். காஷ்மீரில் எதுவும் நடக்கவில்லை. இது வெறும் பாதுகாப்பு நடவடிக்கைதான் என்று உடனடியாக அவர் அறிக்கை வெளியிட்டு நிலைமையை கொஞ்சம் சரி செய்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தொடர்ந்து காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றும் கூட அங்கு அதிரடி ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கியமாக பூன்ச் பகுதியில் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

தனி நபர்

தனி நபர்

இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவதற்கு மெகபூபா முப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மாலை மீண்டும் அவர் காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக மெகபூபா காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் சந்திப்பு நடத்த உள்ளார். அதன்பின்னர் மெகபூபா வீட்டில் இன்று மாலை சந்திப்பு நடக்க உள்ளது.

மாலை என்ன

மாலை என்ன

காஷ்மீர் கட்சியினர், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர். இன்னொரு முக்கிய கட்சியான பீப்பிள் கான்பிரன்ஸ் கட்சியின் தலைவர் சஜாத் லோன் இதில் கலந்து கொள்ள உள்ளார். முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்ததன் மூலம் மெகபூபா, காஷ்மீரில் மத்திய அரசின் நடவடிகைக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+