Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரைசேராத மகள்.. காஷ்மீரில் மெகபூபா முப்தியின் கட்சி படுதோல்வி.. மரண அடி கொடுத்த காங்கிரஸ் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. மேலும் அவரது மகள் இல்லிதா முப்தியும் தோற்றுப்போனார்.

மாநிலத்தில் இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

jammu kashmir assembly election results 2024 jammu kashmir election exit polls mehbooba mufti 2024 2024

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.

பாஜக ஆளும் மாநிலங்கள் இப்போது எத்தனை தெரியுமா? ஜஸ்ட் இந்த மேப்பை பாருங்க!


கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா சட்டசபை தொகுதியில் பிடிபி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் அவர் தற்போது பின்னடைவைய சந்தித்துள்ளார். இவர் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் பரஷீர் அகமது ஷாவிடம் பின்தங்கி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இல்திஜா முப்தியை காங்கிரஸ் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பஷீர் அகமது ஷா வீழ்த்தினார். இவர் மொத்தம் 33,299 ஓட்டுகள் பெற்ற நிலையில் இல்திஜா முப்தி 23,529 வாக்குகள் மட்டுமே பெற்று 9,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் வெல்லப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சொன்னது என்ன தெரியுமா?


அதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஆளும் கட்சியாக இருந்த மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. கடந்த 2004ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்து மெகபூபா முப்தி முதல்வராக செயல்பட்ட நிலையில் தற்போது பிடிபி கட்சிபரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான ரிசல்ட் முழுவதும் வெளியாகி உள்ளது.

இதில் ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.

அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+