ஜம்மு காஷ்மீரில் வெல்லப்போவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு சொன்னது என்ன தெரியுமா?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் வெல்லப்போவது யார்? என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சொல்லப்பட்டது என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த 2014 சட்டசபை தேர்தலுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமான பிறகு முதல் முறையாக 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.
கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி என்பது தொடங்கி நடைபெற உள்ளது. மதியத்துக்குள் ஜம்மு காஷ்மீரின் டிரெண்ட் என்ன? என்பது தெரிந்துவிடும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான (எக்ஸிட் போல்) முடிவுகள் வெளியாகி இருந்தன. அதில் என்ன கூறப்பட்டு இருந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை 3 முனை போட்டி நிலவும் நிலையில் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் உருவாகும் என்று பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
அதன்படி இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-31 சீட்கள், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சிக்கு 11-15 சீட்கள், மக்கள் ஜனநாயக கட்சி 0-2 சீட், மற்றவர்கள் 0-1 சீட்டில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கருத்து கணிப்புகளிலும் யாருக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
பிபிள் பல்ஸ் (People Pulse) காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 33 - 35 தொகுதிகளிலும், பிடிபி 7 - 11 இடங்களிலும், பாஜக 23- 27 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4- 5 இடங்களிலும் வெல்வார்கள் எனவும், போல்ஸ் ஆப் போல்ஸ் கருத்து கணிப்பில் 30 - 35இடங்களிலும், பிடிபி கட்சி 11 - 15 இடங்களிலும், பாஜக 24- 29 தொகுதிகளிலும், மற்றவர்கள் 6 - 8 இடங்களிலும் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிஸ் ( Matrize) கருத்து கணிப்பில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 11- 15 இடங்களிலும், பிடிபி கட்சி 28 இடங்களிலும், பாஜக 25 - 1 இடங்களிலும், மற்றவர்கள் 0 - 1 இடத்திலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மேலும் டெய்னிக் பாஸ்கர் ( Dainik Bhaskar) வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவில் காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 35 - 40 இடங்களிலும், பிடிபி 4- 7 இடங்களிலும், பாஜக 20 - 25 தொகுதிகளிலும், மற்றவர்கள் 12 - 16 தொகுதிகளிலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை.
அதேபோல், குலிஸ்தான் நியூஸ் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 3 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 28 முதல் 30 தொகுதிகளில் வெல்லும். பாஜக 28 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும். மெகபூபாவின் பிடிபி கட்சி 8 முதல் 16 இடங்களில் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளும்
இதனால் ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை தான் அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இப்படியான சூழலில் தான் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது பற்றிய பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் கடந்த 2014ல் பாஜகவும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. ஒருவேளை பாஜக இந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் பிடிபி கட்சியும் கணிசமான இடங்களை கைப்பற்றினால் மீண்டும் பாஜக + பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி அமையலாம்.
மாறாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் வெல்லும் பட்சத்தில் அவர்கள் சுயேச்சை உள்பட பிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்கலாம். ஒருவேளை கடந்த முறை பாதியில் பாஜக ஆதரவை வாங்கி ஆட்சியை கலைத்ததால் பிடிபி கட்சியின் மெகபூபா முப்தியுடன் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சியுடன் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் அரசியல் என்பது தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications