மீண்டும் வீட்டுக்காவல்... வெளியே போக முடியவில்லை...மெகபூபா முப்தி குற்றச்சாட்டு!
ஜம்மு: தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் மீதான எதிர்ப்புகளை தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த வாரமும் இதேபோல் தான் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மெகபூபா முப்தி கூறி இருந்தார். ஆனால் போலீசார் இதனை மறுத்து இருந்தனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது.அங்கு பதற்றம் ஏற்படுவதை தவிர்க்க ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள்பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது. அவர்கள் ஓராண்டுக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். இதேபோல் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே மெகபூபா முப்தி கடந்த வாரம் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்தார். தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள தனது கட்சி தலைவர் வாகித் உர் ரகுமான் பர்ராவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற புல்வாமா செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை என்று கூறி இருந்தார். ஆனால் இதனை மறுத்த போலீசார், மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகக் அவர் புல்வாமா செல்ல அனுமதிக்கப்படவில்லை என விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் மெகபூபா முப்தி தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது :-
பட்காம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க விரும்புகிறேன். ஆனால், எனது வீட்டிற்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ள காவல் துறை மற்றும் பாதுகாப்பு என்னை தடுத்து நிறுத்துகின்றனர். அரசின் மீதான எதிர்ப்புகள் வரும்போது அதனை தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications