35ஏ பிரிவை ரத்து செய்வதா? காஷ்மீர் பற்றி எரியும்... உயிர் மூச்சு உள்ளவரை தடுப்போம்: மெஃபூபா முப்தி
ஸ்ரீநகர்: தங்களது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவை மத்திய அரசு நீக்கப் போகிறது என்கிற செய்திகளால் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
அரசியல் சாசனத்தின் 370. 35 ஏ பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. 35 ஏ பிரிவானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்த குடிமக்கள் யார் என்பதை வரையறை செய்கிறது.
இதனால் பிற மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீரில் சொத்துகளை வாங்கி குவிக்க முடியாது. இதனால் அந்த தேசிய இனத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

35ஏ முட்டுக்கட்டை
ஆனால் பாஜகவோ, 35 ஏ பிரிவானது ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்கிறது. மேலும் இது முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக தொடர்ந்து இருப்பதையும் பாஜக விரும்பவில்லை. இதனால் 35 ஏ பிரிவை நீக்குவதில் தீவிரமாக இருக்கிறது.

ராணுவம் குவிப்பால் பதற்றம்
இந்நிலையில் திடீரென ஜம்மு காஷ்மீரில் 10,000 ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கவே ராணுவம் குவிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காஷ்மீர் பற்றி எரியும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது பாஜக. அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவின் மீது கை வைத்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் பற்றி எரியும்.

இறுதிவரை போராடுவோம்
எங்கள் உயிர்மூச்சு இருக்கும் வரை ஜம்மு காஷ்மீரத்தின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாக்க போராடுவோம் என்றார். இதேபோல் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications