வாரனாசியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த ரிக்ஷாக்காரர், ஆட்டோ டிரைவர்
வாரனாசி: உத்தர பிரதேசத்தில் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதில் உயிர் இழந்தனர். இதையடுத்து ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிட் குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். மேலும் ஒரு சிறுமி மரத்தில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் போலீசாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இப்படி அகிலேஷ் யாதவ் ஆளும் மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை 2 பேர் சேர்ந்த சீரழித்துள்ளனர்.
வாரனாசியில் உள்ள மந்துவாதிஹ் ரயில் நிலையம் அருகே 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி தண்ணீர் தேடி அலைந்துள்ளார். இதை பார்த்த பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்ஷாக்காரரான சுரேஷ் யாதவ் சிறுமியை அழைத்துக் கொண்டு பரஸ்நாத் பட்டேல் என்பவரின் ஆட்டோவில் ஏறினார்.
முதைலா பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு சுரேஷ் பரஸ்நாத்திடம் கூறினார். இந்நிலையில் வழியில் ஒரு தோட்டத்தை பார்த்த சுரேஷும், பரஸ்நாத்தும் சிறுமியை அங்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். சிறுமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் சிறுமியை அடித்து நொறுக்கி வாயில் துணியை திணித்து பலாத்காரம் செய்தனர்.
இந்நிலையில் தோட்டத்தின் காவலாளியான திலிப் சோனேகர் அவர்களை பார்த்துவிட்டு அங்கு வந்து அந்த இருவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேஷ் மற்றும் பரஸ்நாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications