எங்கள் பிரதமர் ஒரு திருடர்.. மோடிக்கு எதிராக வைரலான ஹேஷ்டேக்.. விஸ்வரூபமெடுக்கும் ரபேல்!
எங்கள் பிரதமர் ஒரு திருடர் என்று பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் இணையத்தில் வைரலாகி உள்ளது.
டெல்லி: எங்கள் பிரதமர் ஒரு திருடர் என்று பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடிதான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத்தை கொடுக்க சொன்னார் என்று பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.
அதில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பேச்சு மூலம் மோடி ஒரு திருடர் என்று தெரிகிறது. மோடியை ஒரு திருடர் என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார் என்று ராகுல் கூறினார். இதையடுத்து எங்கள் பிரதமர் ஒரு திருடர் என்று மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
|
ஏன் தெரியுமா?
இவர் ''ரபேல் ஒப்பந்தத்திற்கு 13 நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பாதுகாப்பு துறை என்ற நிறுவன கிளையை உருவாக்குகிறது. ஒப்பந்தத்திற்கு 10 நாட்களுக்கு முன் டாஸால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டணி வைக்கிறது. அதன்பின் எந்த முன்னனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் அளிக்கப்படுகிறது, அதனால் தான் எங்கள் பிரதமர் ஒரு திருடர் என்கிறோம்'' என்று இவர் கூறியுள்ளார்.
|
தேர்தல்
இவர் ''தேர்தலுக்காக பல கோடிகளை எப்படி பாஜக செலவு செய்கிறது என்று தெரியுமா. அவர்கள் பெரிய நிறுவனங்களின் வியாபாரத்திற்கு உதவுகிறார்கள். கைமாறாக அவர்களுக்கு தேர்தல் முதலீடு கிடைக்கிறது'' என்றுள்ளார்.
|
டீ சர்ட் வேண்டும்
இவர் எங்கள் பிரதமர் ஒரு திருடர் என்று டீ சர்ட் அடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
|
அப்படித்தான் அழைப்பார்கள்
பிரதமர் மோடி தன் மீது மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தவறு செய்தவர்கள்தான் அமைதியாக இருப்பார்கள். ஒருவேளை பிரதமர் அமைதியாக இருந்தால் அவரை மக்கள் திருடர் என்றுதான் அழைப்பார்கள் என்று இவர் கூறியுள்ளார்.
|
என்ன செய்ய போகிறது
இந்த ரபேல் பிரச்சனையை மறைக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது, போலி என்கவுண்டரா, மத பிரச்சனையா, இல்லை மீண்டும் பணமதிப்பிழப்பு நீக்கமா என்று கேட்டுள்ளார் இவர்.
|
பாகிஸ்தான் பிரச்சனை
ரபேல் ஊழல் விவகாரம் பெரிதாகி உள்ள நிலையில் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரச்னையை பேசி அதை திசை திருப்ப பார்க்கிறார் என்று இவர் கூறியுள்ளார்.
|
கையில் எழுதினார்கள்
இந்த டிவிட்டர் டிரெண்டை தொடர்ந்து பலர் தங்கள் கைகளிலேயே ''எங்கள் பிரதமர் ஒரு திருடர்'' என்று எழுதியுள்ளனர்.

மாயமானது
இந்த நிலையில்தான் இந்த டிவிட்டர் டேக் நேற்று முழுக்க தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ஆனால் சில மணி நேரத்திற்கு பின் இந்த டிரெண்ட் மறைந்துவிட்டது. கோ பேக் மோடி டிரெண்ட் உலக வைரல் ஆகியது போலவே இதுவும் தேசிய வைரல் ஆனது. அது பாதியில் மறைக்கப்பட்டது போலவே இதுவும் மறைக்கப்பட்டு இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications